பெங்களூர் அணியில் அதிரடியாக விளையாடிய நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் சால்ட் இருவரும் அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
18வது ஐ.பி.எல். சீசன் நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் திரையுலக பிரபலங்களின் கண்கவர் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன் கோலகலமாகத் தொடங்கியது.
தொடர்ந்து அதைத் தொடர்ந்து நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் முதல் போட்டியில் களம் கண்டன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் ரஜத் படிதார் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணியின் குயிண்டன் டிகாக் மற்றும் சுனில் நரைன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ஹேசல்வுட் வீசிய முதல் ஓவரில் சுலபமான கேட்ச் வாய்ப்பை பெங்களூர் அணி கைநழுவ விட்டது. எனினும் அடுத்த பந்திலேயே குயிண்டன் டிகாக் 4 ரன்கள் நிலையில் கீப்பரிடம் எடுத்த கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் 3 ஓவர்களுக்கு கொல்கத்தா அணி வெறும் 9 ரன்களே எடுத்திருந்தது. இதன் பிறகு கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானேவும், சுனில் நரைனும் இணைந்து பெங்களூர் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். பெங்களூர் பவுலர்கள் ஒவ்வொரு ஓவரிலும் 15 முதல் 20 ரன்கள் வரை பறந்தன. இதனால் 10 ஓவர்கள் முடிவதற்குள் கொல்கத்தா அணி 107 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது.
இதனால் கொல்கத்தா அணி 200 ரன்களை கடந்து இமாயல இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அடுத்த 10 ஓவர்களில் ஆட்டம் முழுக்க பெங்களூர் அணி பக்கம் திரும்பியது.
அரைசதத்தை நெருங்கிய சுனில் நரைன் 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ரூ.23 கோடி கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட வெங்கடேஷ் அய்யர் 6 ரன்களில்வெளியேறினார். கேப்டன் ரகானே, 31 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெங்களூர் அணியின் சுழற் பந்து வீச்சாளர் குருணால் பாண்டியா சிறப்பான பந்துவீச்சின் மூலம் இருவரையும் போல்டு செய்தார். அடுத்து வந்த ரகுவன்ஷி 30 ரன்கள் கிளீன் சேர்த்து ஓரளவு தாக்குப்பிடித்த போதும், மறுமுனையில் ரிங்கு சிங் (12 ரன்), ரஸல் (4 ரன்), ஹர்ஷித் ராணா (0 ரன்) என பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மிடில் ஆர்டரில் பெங்களூர் அணியின் பந்துவீச்சு கொல்கத்தா அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்திய நிலையில், இந்த தருணம் ஆட்டத்தையே தலைகீழாக மாற்றிவிட்டது. பெங்களூர் அணி தரப்பில் குருணால் பாண்டியா 3 விக்கெட்டுகளும், ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளும், சுயாஷ், தயாள், ரஷிக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தி...