மேலும், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கவும் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதேபோல, டாஸ்மாக் நிறுவனத்திற்கு, மதுபானங்களை சப்ளை செய்த மது உற்பத்தி ஆலைகள் மற்றும் பாட்டில்லிங் தயாரிப்பு கம்பெனிகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபானகடைகளுக்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் விடுத்தது உள்ளிட்டவற்றில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
அமலாக்கத்துறையின் இந்த சோதனை அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என்றும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறியிக்கக்கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்த கூடாது என அமலாக்கத்துறைக்கு உத்தரவிடக் கோரியும் தமிழக உள்துறை செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில்குமார் அமர் வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், "ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் மணல் குவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை இதுபோல சோதனை நடத்தியது. மாவட்டஆட்சியர்களுக்கு அனுப்பிய சம்மனுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் உச்சநீதி மன்றம் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. அதன்படி விசாரணைக்கு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "மாநில அரசின் அனுமதியைப் பெற்றுத்தான் சோதனை நடத்த வேண்டும்" என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் நடவடிக்கை தொடர்பாக குறிப்பு கோரிக்கை வைக்காமல், பொது பொத்தாமாக கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது," என தெரிவித்தனர்.
மேலும், அதனை திருத்தம் செய்து புதிய மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து டாஸ்மாக் தரப்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர் விக் ரம்சவுத்ரி, "சோதனை நடத்தும் போது, அதற்குரிய காரணங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவி...