இப்போது இந்த பஸ்களுடன் சேர்ந்து ஏ.சி. பஸ்களிலும் செல்லக்கூடிய வகையில் ரூ.2000 மதிப்புள்ள மாதாந்திர அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மந்தைவெளி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில், ரூ.2000 மதிப்புள்ள, விருப்பம் போல் பயணம் செய்யும் மாதாந்திர பயண அட்டையை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த பேருந்து அட்டையை வாங்குபவர்கள், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின்கீழ் இயங்கும் குளிர்சாதனப் பேருந்து (ஏ.சி.), சாதாரணப் பேருந்து, விரைவுப் பேருந்து (எக்ஸ்பிரஸ்), சொகுசு பேருந்து (டீலக்ஸ்), சிற்றுந்து (மினி பஸ்), இரவு நேர பேருந்துகளில் மாதம் முழுவதும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம்.
ரூ.1000 பயண அட்டை வழங்கும் அனைத்து பகுதிகளிலும் ரூ.2000 பயண அட...