18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்க உள்ளது.
இந்த சீசனையொட்டி நடந்த மெகா ஏலத்தில், 5 அணிகள் கேப்டனாக நியமிக்க வேண்டிய வீரரை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தன. அதன் படி, பெங்களூர் அணி ரஜத் படிதரையும், கொல்கத்தா அணி ரகானேவையும், லக்னோ அணி ரிஷப் பண்ட் ஐயும், பஞ்சாப் அணி ஷ்ரேயாஸ் ஐயரையும் கேப்டனாக நியமித்தது.
இதில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் ஐ அதிக விலை கொடுத்து லக்னோ அணி வாங்கியது. இதையடுத்து, டெல்லி அணிக்கு யாரை கேப்டனாக நியமிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கே.எல். ராகுல், டூபிளிஸ்சி போன்ற மூத்த வீரர்கள் அந்த அணியில் இருக்கும் நிலையில், ஆல் ரவுண்டர் அக்சர் படேலை கேப்டனாக நியமிப்பதாக டெல்லி அணி நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கே.எல். ராகுல் கேப்டன் ஸியை ஏற்காத காரணத்தினால், அக்சர் படேலுக்கு கேப்டன் பதவியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2019 முதல் டெல்லி கேபிடல்ஸ் அணியில் அக்சர் படேல் விளையாடி வருகிறார்.
இந்த சீசனில், ரூ.16.50 கோடிக்கு டெல்லி அணி அவரை தக்கவைத்தது.
கேப்டன் பொறுப்பில் அக்சர் படேலுக்கு பெரிய அளவில் அனுபவம் இல்லை.
உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் குஜராத் அணியை 23 போட்டிகளில் வழிநடத்தி உள்ளார்.
கடந்த சீசனில் பெங்களூரு அணிக்கு எதிரான ஒரு போட்டியில் டெல்லி க...