தமிழக சட்டசபைக் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியது.
கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் மு.அப்பாவு திருக்குறளை வாசித்தார்.
அதைத் தொடர்ந்து 2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை (நிதிநிலை அறிக்கை) தாக்கல் செய்யும்படி நிதியமைச்சர் தங்கம் தென்னரசுக்கு அழைப்பு விடுத்தார்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு எழுந்து பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார்.
அப்போது திடீரென எழுந்த எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கையில் ஒரு பேப்பரை வைத்துக் கொண்டு பேச முயன்றார்.
ஆனால் அவருக்கு மைக் இணைப்பு வழங்கப்படவில்லை. இருந்தும் அவர் தொடர்ந்து பேச முயன்றார்.
அப்போது சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு, "உங்களுக்கு மைக் இணைப்பு வழங்கப்படவில்லை, எனவே நீங்கள் பேச வேண்டாம்," என்றார். ஆனால்,
"எனக்கு பேசுவதற்கு அனுமதி தாருங்கள். அதற்கும் மைக் இணைப்பு வழங்குங்கள்," என ஆர்.பி.உதயகுமார் கேட்டார். இருந்தும் அவருக்கு பேச மைக் இணைப்பு வழங்கப்படவில்லை.
அதைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, "கடந்த 2017 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது எதிர்க்கட்சித் தலைவராக இப்போதைய முதலமைச்சர் (மு.க.ஸ்டாலின்) இது போன்று பேச முயன்றார்.
அப்போது அவருக்கு மைக் இணைப்பு தரவில்லை. அதையே தான் இப்போது நாங்கள் செய்கிறோம். நீங்கள் இது பற்றி இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம். திங்கட்கிழமைக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்," என்றார்.
உடனே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்தார். அவரைத் தொடர்ந்து மற்ற...